செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (00:19 IST)

அதிக சம்பளம்...சூப்பர் ஸ்டார் பட நடிகை நீக்கம்

ரஜினி பட நடிகை சம்பளம் உயர்த்திக் கேட்டதால்  பட வாய்ப்புகளை இழந்ததாக ஒரு தகவல் வெளியாகிறது.

ரஜினி நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் தீபிகா படுகோன். அவர் இந்தி சினிமாவில் ஆண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் பத்மாவதி, ரம்லீலா உள்ளிட்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி பைஜீ ஜீப்ரா என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ரன்வீர் சிங் உடன் இணைந்து நடிக்க அவருக்கு இணையான  சம்பள கேட்டதால் நடிகை தீபிகா படுகோனை நடிக்கவைக்கவில்லை என தகவல் வெளியாகிறது.

மேலும் ரன்வீர்- தீபிகா ஜோடி, பத்மாவத், பாஜிரவ் மஸ்தானி மற்றும் ராம்லீலா உள்ள்ளிட்ட படங்களில் நடிதுள்ளது குறிப்பிடத்த்க்கது.