புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (22:56 IST)

பீஸ்ட் பட ஷூட்டிங்...வேட்டி சட்டையில் விஜய்...வைரல் புகைப்படம்

நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் வேண்டிய விஜய் ரசிகர்கள் தவம் கிடக்கும்போது, இப்பட ஷீட்டிங்கின்போது, எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் 3 ஆம் கட்டப்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம்,  இயக்குநர் செல்வராகவன் மற்றும் பாலிவுட் சினிமாவில் காமெடி நடிகரும் சினனத்திரை பிரபலமான  லிலிபுட்  இணைந்துள்ளது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு ( 2022) கோடை காலத்தில்( ஏப்ரல்_ மே) வெளியாகும் என தகவல் கசிந்தாலும் இந்தத் தகவல் உறுதிப் படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அடுத்த அப்டேட் வேண்டிக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு பீஸ்ட் பட ஷூட்டிங்கின்போது, விஜய் அவருடன் சில முக்கிய கலைஞர்கள் அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.