திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2023 (10:11 IST)

நேத்து பேசுன பேச்சு! தலைமறைவான இயக்குனர் ரத்னகுமார்..!? – ரஜினி ரசிகர்கள் காரணமா?

Ratnakumar
நேற்று லியோ வெற்றி விழாவில் ரஜினியை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குனர் ரத்னகுமார் சமூகவலைதளத்தில் இருந்து சில நாட்களுக்கு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகி ஹிட் அடித்துள்ள படம் லியோ. இந்த படத்தின் வெற்றி விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா என பல பிரபலங்களும், ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

லியோ படத்தின் கதை, வசனத்தில் பணியாற்றியவர் லோகேஷின் நண்பரும், இயக்குனருமான ரத்னகுமார். இவர் தீவிரமான விஜய் ரசிகரும் கூட. முன்னதாக ஜெயிலர் படம் இசை வெளியீட்டின்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த போட்டி பற்றி பேசியபோது நடிகர் ரஜினிகாந்த் காக்கா, கழுகு என்று குறிப்பிட்டு சொன்ன குட்டி ஸ்டோரி வைரலானது.

இந்நிலையில் நேற்றைய விழாவில் பேசிய ரத்னகுமார் “எவ்வளவு உயர பறந்தாலும், பசிச்சா கீழ இறங்கி வந்துதான் ஆகணும்” என பேசி இருந்தார். அவர் ரஜினியைதான் மறைமுகமாக கிண்டல் செய்கிறார் என கொதிப்படைந்த ரஜினி ரசிகர்கள் பலர் அவரை சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் நேற்று நள்ளிரவு பதிவிட்ட ரத்னகுமார், தனது அடுத்த படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் காரணமாக சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு ஆஃப்லைன் செல்வதாக தெரிவித்திருந்தார். அதை பலர் ரஜினி ரசிகர்களின் ஏச்சுக்கு ஆளாக வேண்டாமெனதான் ரத்னா சைலண்ட் ஆகியுள்ளதாக பேசிக் கொள்கின்றனர். எனினும் அவரது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

Edit by Prasanth.K