ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட சூப்பர் ஸ்டாரின் மகன் !
Sinoj|
Last Modified வியாழன், 18 பிப்ரவரி 2021 (22:17 IST)
இன்று சென்னையில் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கலந்துகொண்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ஐபிஎல். உலகெங்கிலும் இருந்து இதைக் காண மக்கள் வருவர். இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் காணபர்.
இந்நிலையில்
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெற்றுவருவதால் இன்று காலை முதலே யார் யார் எந்த அணியினர் ஏலத்தில் எடுத்துள்ளனர் என்பதைக் காண மக்கள் ஆர்வமுடன் இருந்தனர்.
இந்த 14 வது ஐபிஎல் தொடர் ஏலத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. சச்சின் மகன் அர்ஜூனை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.அதேபோல் நடிகர் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கபடும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் இந்த ஏலத்தில் கலந்துகொண்டுள்ளார்.
நடிகர் ஷாருக்கான் சொந்த அணிதான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.