திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (15:16 IST)

டிரெண்டிங்கில் #SureshChakravarthy: ஒரே ப்ரோமோவில் ஹீரோவான சுரேஷ் தாத்தா!!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #SureshChakravarthy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கொஞ்சமாக கொஞ்சமாக மக்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்து வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவர் மட்டும் தான் இந்த நிகழ்ச்சியில் மிகவும் சுறு சுறுப்பாக டாஸ்களை வியாடுவதிலும் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருக்க தகுதி உடையவராகவும் மக்களால் பார்க்கப்படுகிறார்.
 
ஆனால், நேத்து வந்த அர்ச்சனா உட்பட வீட்டிற்குள் இருக்கும் மொத்த ஹவுஸ்மேட்ஸ்களும் சேர்ந்து அவரை டார்கெட் செய்து ஒதுக்கி வைக்கிறார்கள். இருந்தும் சுரேஷ் அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
 
அந்த வகையில் வீட்டில் உள்ள வேல்முருகன், ரியோ மற்றும் கேபி உள்ளிட்டோருக்கு ஆதரவு கொடுப்பவர்கள் அவர்களை கார்டன் ஏரியாவில் முதுகில் தூக்கிக்கொண்டு கடைசிவரை நின்று காப்பாற்றவேணும். இதில் வீட்டில் உள்ள அனைவரும் வேல்முருகன் மற்றும் ரியோவுக்கு ஆதரவு கொடுத்தார்கள்.
 
தனித்து நின்ற கேபிரில்லாவிற்கு சுரேஷ் முன்வந்து அவரை முதுகில் தூக்கிக்கொண்டு நின்றார். வியர்வை வடிய சுரேஷ் கஷ்டப்பட்டதை பார்க்கமுடியாத கேபிரில்லா விடுங்க தாத்தா வேண்டாம் என பாதியில் இறங்கிவிட்டார். இதுதான் இரண்டாம் ப்ரோமோவாக இருந்தது.
 
இதனை கண்டதும் இத்தனை நாள் சுரேஷை வெறுத்து வந்தவர்களும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #SureshChakravarthy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.