திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (09:38 IST)

கூண்டுக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி - ஜித்தன் ரமேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று கொஞ்சம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. வீட்டிற்குள் புது வரவாக வைல்ட் கார்ட் மூலம் தொகுப்பாளினி அர்ச்சனா நுழைத்து நிகழ்ச்சியை மட்டுமல்லாது போட்டியாளர்களை ஒரு வழி பண்ணிட்டார்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், வீட்டில் சுவாரஸ்யமும் ஈடுபாடும் குறைவாக இருப்பதாக ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி இருவரையும்  ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் ஒன்று சேர்ந்து கண்ணாடி கூண்டுக்குள் அடைத்துவிட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் ரொம்ப நல்லாவே டான்ஸ் ஆடினார்கள். நியாயமா பார்த்தால் ரேகா தான் உள்ளே போகணும். நல்லா நடத்துறீங்க பிக்பாஸ்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆடியன்ஸ் அனைவரும் ஒன்று கூடி ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷிற்கு ஆதரவாக போர் கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் இருவரும் கூண்டில் அடைக்கப்பட்டபிறகு பாலாஜி முருகதாஸ், " பாவம் இந்த பொண்ண புடிச்சு அடச்சிட்டாங்க" என ஷிவானியை குறித்து சுரேஷிடம் கூறி வருத்தப்படுகிறார். அதென்னமோ தெரியல பாலாவுக்கு ஷிவானி மேலே மட்டுமே தான் இரக்கம், ஏற்றம் எல்லாம் வருது. கொளுத்தி போடுவோம் காசா பணமா...