புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (15:10 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி ப்ரொமோவில் நாமினேட் செய்யப்படும் இரு போட்டியாளர்கள் - வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்ருக்கிறது. பிக் பாஸ் பார்வையாளர்களின் பெரும்பான்மையான கோபத்தையும் எரிச்சலையும் சம்பாதித்திருந்த காயத்ரியின் வெளியேற்றம் எப்போது என்று அனைவரும் ஆவலோடு இருந்தநிலையில், அவர் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

புது போட்டியாளர்களும் இப்போது நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் காயத்ரி  எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது வந்துள்ள புதிய புரொமோவில் அடுத்த வார எலிமினேஷனுக்கு, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களால் சினேகன் அதிகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார், அதோடு ரைசாவும் ஒருசிலரால் நாமினேட் செய்யப்படுகிறார்.
 
இதனால் பிக்பாஸ் வீட்டிலுருந்து யார் வெளியேற்றப்பட போகிறார்கள் எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள் உள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.