திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (22:12 IST)

''சிங்கம்-4'' கதை ரெடி செய்யும் ஹரி...கலாய்த்த ப்ளூசட்டை மாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர், நடிப்பில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் சிங்கம்-1. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். அனுஷ்கா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு, தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 2013 ஆம் ஆண்டு சிங்கம் -2 ரிலீஸானது. இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம்-3 படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.

இந்த நிலையில், நீண்ட நாட்களாக சூர்யா,ஹரி கூட்டணியில் படம் உருவாகாத நிலையில், சிங்கம்-4 படத்தின் கதை தயார் செய்துள்ளதாகவும், இதில், சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து, ப்ளூசட்டை மாறன் தன் டிவிட்டர் பக்கத்தில், சூர்யாவும், ஹரியும் கடைசியாக சிங்கம்-1 படம் ஹிட் கொடுத்தனர். அதன்பிறகு 12 ஆண்டுகளாக இருவரும் ஹிட் கொடுக்கவில்லை.சிங்கம்-4 வெற்றி பெற்றால் இவர்கள் இருவருக்கும்  நீண்ட ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெறும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj