புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (17:00 IST)

நீங்க ஒரு நடிப்பு அரக்கன்: விஜய்சேதுபதியை பாராட்டிய ஹர்பஜன்சிங்!

நீங்கள் ஒரு நடிப்பு அரசன் என்றும் நடிப்பு துறவி என்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார் 
 
ஹர்பஜன்சிங், லாஸ்லியா, அர்ஜுன் நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் ஸ்னிக்பிக் வீடியோவை சற்றுமுன்னர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 8 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும் போதே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தன்னுடைய முதல் படத்தின் ஸ்லீபிக் வீடியோவை வெளியிட்ட விஜய் சேதுபதிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஹர்பஜன்சிங் கூறியிருப்பதாவது
 
சேது ஜி விஜய்சேதுபதி ரொம்ப நன்றி." ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி". உங்கள் உழைப்பு! முயற்சி! ஆளுமை! மனிதர்களை மதிக்கும் குணம்! தலைகனம் இல்லா பண்பு! எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா. பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி!