செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (18:51 IST)

டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன்சிங், சந்தானம் கேரக்டர் இதுதான்!

நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த டிக்கிலோனா என்ற திரைப்படம் வரும் பத்தாம் தேதி ஜீ தமிழ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டைம் டிராவல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளார் என்பதும் அது மட்டுமின்றி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள டுவிட் மற்றும் புகைப் படத்தில் இருந்து சந்தானம் மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரும் இந்த படத்தில் ஹாக்கி வீரர்கள் ஆக நடித்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தானம் நடித்துள்ள மூன்று கேரக்டரில் ஒரு கேரக்டர் ஹாக்கி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது