1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (01:38 IST)

நடிகைக்கு பாலியல் தொல்லை….நடன இயக்குனர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

பிரபல நடிகைக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக வில்லன் நடிகர் பாலிவுட் நடிகர்  கணேஷ் ஆச்சார்யாவின்  மீது மும்பை போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

 பிரபல இந்தி  நடன  இயக்கு நர் கணேஷ் ஆச்சார்யா. இவர்  ஜீவா நடிப்பில் வெளியான ரவுத்திரம் என்ற படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

இவர் தான் புஷ்பா படத்தில் இடம்பெற்ற  'ஊ சொல்றியா மாமா 'என்ற பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார்.

இ ந்  நிலையில்  2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நடகக்குழிவின் இடம்பெற்ற 35 வயது நடிகை ஒருவர்  போலீஸ் நிலையத்திலும், பெண்கள்  கமிஷனிலும் புகார் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் கணேஷ் ஆச்சர்யா மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார்  அவர் மீது மும்பை நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிக்கை டதாக்கல் செய்துள்ளனர்.