1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 15 மே 2021 (16:26 IST)

விஜய், ரஜினி பட இசையமைப்பாளருக்கு பிறந்தநாள் ..குவியும் வாழ்த்து

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு இன்று பிறந்தநாள். எனவே திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில், அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பா.ரஞ்சித். இதே படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் சந்தோஷ் நாராயணன். இதையடுத்து மெட்ராஸ், கபாலி, காலா, விஜய்யி பைரவா, தனுஷின், ஜனமே தந்திரம், கர்ணன்  உள்ளிட்ட படங்ளுக்கு இசையமைத்துள்ளார்.  இவரது இசையமைப்பில் அடுத்து சர்பட்டா என்ற படம் வெளிவரவுள்ளது இப்படத்தை ப.ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.#HappyBirthdaySaNa #HappyBirthdaySanthoshNarayanan

இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.. எனவே பாடலாசிரியர் விவேக், பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் பார்த்திபன உள்ளிட்டபலரும் அவரது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி வருகின்றனர்.