1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 மே 2021 (11:41 IST)

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி கொடுத்த செளந்தர்யா ரஜினிகாந்த்

தமிழக அரசின் கொரோனா நிதியாக திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி வழங்கி கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கி உள்ளார்
 
இன்று காலை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நிவாரண நிதியாக முதல்வரிடம் அளித்தார். அப்போது சௌந்தர்யாவின் கணவரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்தின் மகள் ரூபாய் ஒரு கோடி நிதி அளித்த தகவலை ரஜினிகாந்த் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.