வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (23:49 IST)

கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்த்நாள்....ரசிகர்கள் வாழ்த்து

கவிப்பேரரசு வைரமுத்து நாளை தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே அவரது ரசிகர்கள் இணையதளத்தில் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் இலக்கியத்தளத்திலும், சினிமாவிலும் இளைஞர்கள் முதல்பெரியோர் வரை அனைவரிடத்திலும் தன் கவித்திறத்தாலும் பாடல் வரிகளாலும் பேச்சாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசியராக முன்னணி நடிகர்களுக்குப் பாடல் எழுதி 7 தேசிய விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பாடல்கள் நாட்படு தேறல் என்ற தலைப்பில் நூறு இசையமைப்பாளர்கள், நூறு பாடகர்கள் என ஒரு நிகழ்ச்சியைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நாளை ஜூலை 13 ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிடு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள்தெரிவித்து வருகின்றனர்.