நடிகர் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

surya
Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (15:49 IST)
திரையுலக மார்கண்டேயராக இருக்கும் நடிகர் சிவக்குமாருடைய மகனாக 23 ஜூலை 1975 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் நடிகர் சிவக்குமார் மகன் என்பதைக் கூடச் சொல்லாமல் ஒரு கார்மெண்ட்ஸில் வேலைக்குச் சேர்ந்தார்.
சினிமா வேண்டாம் என்று ஒதுங்கியிருந்த சூர்யாவுக்கு வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.  அதைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட சூர்யா, தன் நண்பர் நடிகர் விஜய் படங்களில் அவருக்கு  நண்பராகவே நடித்தன் மூலம் மக்களிடன் இன்னும் பிரபலமானார்.
 
அதன்பிறகு இயக்குநர்கள்  பாலா,கெளதம் மேனன் ஆகியோருடைய இயக்கத்தில் நடித்து சிறந்த கதாநாயகனாக மாறி, இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
 
சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த சூர்யாவுக்கு எதிராக அரசியலில் எதிர்ப்பு வலுத்த போதும், தன் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
 
இந்நிலையில் காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட  நடிகர் ரஜினிகாந்த், சூர்யவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
 
இந்நிலையில் இன்று சூர்யாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள  நடிகர் சந்தியராஜ், அதில், உன்னைவிட வயதில் மூத்தவன் என்பதால் உன்னை வாழ்த்துகிறேன்.கல்விக்கொள்கைக்கு எதிராககவும் ,சமூகநீதிக்காக குரல் கொடுத்த உன்னுடைய துணிச்சலை நான் வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ஒரு நடிகராக மட்டிமே இருந்து, தன் படங்கள் ஓடினால் போதும், என்று மட்டும் இருக்காமல் பல ஆயிரம் குழந்தைகள் படிப்பிற்கும் , கல்வி பயில முடியாத ஏழை மாணவர்க்களுக்கு அகரம் பவுண்டேசன் நிறுவி அவர்களை சிறந்த மாணவர்களாக உருவாக்கி வருகிறார். அதன்வழியாக நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்து பாராட்டிவரும் சமூக அக்கரை கொண்ட நடிகர் சூர்யாவை  நாமும் வாழ்த்தலாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :