வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (10:55 IST)

ஏமி ஜாக்சனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஏமி லூயிசு சாக்சன் என்ற ஏமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர் ஆவார்.  மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார். கடைசியாக 2.0 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். 


 
ஏமி சாக்சன் இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு அருகில் உள்ள குனவ்சுலி கிராமத்தில் ஜனவரி 31, 1991ல் பிறந்தார். 
 
இவரது தந்தை ஆலன் சாக்சன் பிபிசி வானொலியில் பனியாற்றியவர். தாயார் பெயர் மாக்ரிதா சாக்சன். ஏமிக்கு இரண்டு வயதான போது இவர்களது குடும்பம் லிவர்பூல் நகருக்கு குடிபெயர்ந்தது. அங்கு உள்ள புனித எட்வர்டு கல்லூரியில் தனது படிப்பை முடித்தார்.
 
இவர் 2008ம் அண்டு அமெரிக்காவின் டெக்சாசில் நடைபெற்ற பதின்வயதினருக்கான உலக அழகிப்போட்டியில் (Miss Teen World 2008) முதல் பரிசு பெற்றார். தொடர்ந்து லிவர்பூல் பதின்வயது அழகி 2010 (Miss Teen Liverpool) விருதையும் பெற்றார். இது தவிர உலக அளவில் 18-கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
 
ஏமி சாக்சன் 2010ல் வெளியான மதராசபட்டணம் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் நடிகையாகவும் தனது முத்திரையை பதித்தார். இதுவே இவரது முதல் திரைப்பட அனுபவம் ஆகும். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
 
இந்த படத்தை தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, 2.0 என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஏமி ஜாக்சனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.