1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 6 ஜூலை 2023 (10:59 IST)

தளபதி 68 ரகசியம் ஒன்னு கூட கசியக்கூடாது - பூட்டிய கதவை திறக்காமல் வேலை செய்யும் வெங்கட் பிரபு!

தளபதி விஜய்யின் 68வது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் இந்நிறுவனத்தின் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே படத்தின் வேலைகள் குறித்த ரகசியங்கள் வெளியில் கசிந்ததால் இப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது படக்குழுவினை ஒரு ஹோட்டலில் அடைத்து படம் முடியும் வரை வீட்டிற்கே போகக்கூடாது. 
 
உங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கேயே கிடைக்கும் என கூறி முழு வீச்சில் மும்முரமாக வேலை செய்து வருகிறார்கள் என செய்திகள் வெளியாகியது. படத்தின் விஷயம் ஒன்று கூட வெளியில் வராமல் இருக்க MOBILE அனுமதி இல்லையாம். கதை டிஸ்கஷன் நடைபெறும்போது ஹோட்டல் ரூம் கதவை கூட திறக்காமல் முழுமூச்சாமாக தளபதி 68 படத்தின் வேளையில் கவனம் செலுத்தி வருகிறாராம் வெங்கட் பிரபு.