வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:31 IST)

காதலரின் திருமணத்தில் கலந்துகொண்ட ஹன்சிகா..வைரலாகும் புகைப்படம்

hansika
தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரபுதேவாவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா.

இப்படத்தின் வெற்றிக்குப் பின், வேலாயுதம்,சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின், ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்த  மீண்டும் மும்பைக்குச் சென்ற அவர் தொழில்துறையில் ஈடுபட்டடு வந்தார்.
சமீபத்தில், அவர் சிம்புவுடன் இணைந்து  நடித்த மஹா படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோஹைல் கதூரியா நீண்ட நாட்களாக ஹன்சிகா குடும்பத்தின் நண்பர் என்ற தகவல் வெளியானதது.

சமீபத்தில், பாரிஸ் இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில், சோஹைல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானதாக தகவல் வெளியாகிறது,.


கடந்த 2016 ஆம் ஆண்டு சோஹைலுக்கும் ரிங்கி என்ற பெண்ணிற்கும் திருமணம் ஆகியுள்ளது. இந்த  நிகழ்சியில் ஹன்சிகா பங்கேற்றிருக்கிறார், இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj