தனுஷ் இல்லையாஅப்போ? டிராக்கை மாற்றிய எச்.வினோத்.. இப்படியா விஷயம்?
தனுஷ் 2028 வரைக்கும் மிகவும் பிஸியாக இருக்கிறார். அவருடைய லைன் அப்பில் எக்கச்சக்க படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் தனுஷை வைத்து எச் வினோத் இயக்குவதாக இருந்த படம் டீலில் விடப்படுமா அல்லது அந்தப் படத்தின் நிலைமை என்னவாகும் என்பது பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கின்றன. எச் வினோத் தற்போது விஜயை வைத்து ஜனநாயகன் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
அந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அது சம்பந்தமான பிரச்சனை தான் போய்க்கொண்டிருக்கின்றது. அந்த படத்தின் மீதான வழக்கை படக்குழு வாபஸ் வாங்கிவிட்டது. மறுதணிக்கைக்குழுவுக்கும் தணிக்கை வாரியம் படத்தை அனுப்பி இருக்கிறது. இப்படி பாசிட்டிவான சில விஷயங்கள் ஜனநாயகன் படத்தில் நடந்து வருகின்றன.
அதனால் பிப்ரவரி 20ஆம் தேதி அந்தப் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜன நாயகன் படத்திற்குப் பிறகு எச் வினோத் தனுஷை வைத்து தான் படத்தை இயக்குவதாக இருந்தார். அதற்குள் தனுஷ் அவருடைய லைன் அப்பை அதிகமாக்கி கொண்டார். இருந்தாலும் எச் வினோத் எப்போது வந்தாலும் என்னுடைய கமிட்மெண்டை ஒதுக்கி வைத்துவிட்டு அவருடன் இணைய தயார் என்றுதான் கூறியிருந்தார் தனுஷ்.
எச் வினோத் தனுஷ் இணையும் படத்தை லலித் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் லலித்துக்கும் எச் வினோத்துக்கும் இடையே சில பல முரண்பாடுகள் இருப்பதால் வேறொரு தயாரிப்பாளரை எச் வினோத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை நல்ல தயாரிப்பாளர் அமைந்து அதில் தனுஷ் நடிக்க முன் வந்தால் தனுஷை வைத்து வினோத் அந்த படத்தை எடுப்பார்.
அல்லது தனுஷ் அவருடைய லைன் அப்பில் பிஸியாக இருந்தால் அந்தக் கதையில் விக்ரமை நடிக்க வைக்க எச் வினோத் தயாராக இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் எச் வினோத் அவருடைய கதையை தயார் நிலையில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் கிடைத்தால் கண்டிப்பாக அந்தப் படம் கூடிய சீக்கிரம் டேக் ஆப் ஆகும். அதில் தனுஷ் நடிப்பாரா அல்லது விக்ரம் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.