ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 4 செப்டம்பர் 2021 (20:04 IST)

பிலிம்பேர் விருதுக்கு நாமினேட் ஆன எச்.வினோத் படம்

பிரபல இயக்குனருக்கு எச்.வினோத் இயக்கத்தில் உருவாக்கிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் பிலிம்பேர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் வசூல் நல்ல வசூலை கொடுத்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர் ஆகிய விருதுகளுக்காக பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த படம் நிச்சயம் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இயக்குனர் எச் வினோத் தற்போது அஜித் நடித்து வரும் வலிமை என்ற திரைப்படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் மீண்டும் அவர் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது