ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (13:41 IST)

கமல்ஹாசனுடன் இணையும் ஹெச்.வினோத்- வாழ்த்து கூறிய லோகேஷ் கனகராஜ்

lokesh kanakaraj-h vinoth
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஹெச்.வினோத்திற்கு, லோகேஷ் கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹெச்.வினோத். இவர் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இதையடுத்து, ஹெச்.வினோத் நடிகர் கமல்ஹாசனுடன் இணையவுள்ளார். இதனால், கமல்233 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கமலின் தீவிர ரசிகரும் விக்ரம் பட இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் தன் வலைதள பக்கத்தில், என் ஆண்வர் கமல்ஹாசனுடன்  இணைந்து கமல்233 படத்தில் பணியாற்றவுள்ள ஹெ.வினோத்திற்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.