வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 7 மார்ச் 2020 (18:31 IST)

சென்சாரில் தூக்கப்பட்ட "ஜிப்ஸி" படத்தின் வெரி வெரி பேட் வீடியோ பாடல் ரிலீஸ்!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன்.. அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இயக்குனர் அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளை சென்சார் நிராகரித்துவிட்டாலும் கடந்த சில நாட்களாகவே சென்சார் குழுவால் நீக்கப்பட்ட காட்சிகள் யூடியூபில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்தவகையில் தற்போது சென்சாரில் தூக்கப்பட்ட "வெரி வெரி பேட்" என்ற  பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. தெரு வீதி கலைஞர்களை சிறையில் பிடித்து வைத்து கொடுமை படுத்தும் போலீஸ் அதிகாரிகளின் அக்கிரமத்தை எதிர்த்து பாடல் பாடும்படியாக இந்த வீடியோ காட்சி மற்றும் வரிகள் அமைந்துள்ளது.  பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடலுக்கு யுகபாரதி லிரிக் எழுதியுள்ளார்.