1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (12:37 IST)

யோவ் ம**று எவன் யாரு சிலையை திறந்தா எங்களுக்கு என்ன - ஜிப்ஸி சென்சார் தடை காட்சி!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
 
குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன்.. அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இயக்குனர் அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் தெரு வீதி கலைஞர்களை சிறையில் பிடித்து வைத்து கொடுமை படுத்தும் போலீஸ் அதிகாரிகளின் அக்கிரமத்தை திரையிட்டு காட்டியுள்ளனர்.  இந்த காட்சி சென்சாரில் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.