ரூ. 7 கோடியில் கேரவன் வைத்துள்ள பிரபல நடிகர் ...

allu arjune
Last Modified வெள்ளி, 5 ஜூலை 2019 (20:21 IST)
சினிமா பிரபலங்கள் தாங்கள் வெளிப்புர படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காகச் செல்லும் போது, ஓய்வு எடுப்பதற்காக ஒரு கேரவனை தயாரிப்பாளர்கள் வழங்குவார்கள். அதற்கு நாள் ஒன்றுக்கு வாடகை மட்டும் சில ஆயிரங்கள் வரை கொடுப்பார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் சில நடிகர்கள், நடிகைகள்  சொந்தமாகவே  கேரவனை வைத்துள்ளார்கள். இதில், எல்லா வசதிகளையும் உள்ளடக்கியது. 
 
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, நடிகர் விஜய், மற்றும் நடிகைகளில் ஆலியாபட் ஆகியோர் இந்த வகையான  சொகுசான கேரவன்களைப் பயன்படுத்துகின்றனர்.
 
தற்போது நடிகர்களிலேயே மிக அதிக சொகுசான கேரவனை பயன்படுத்துவது நடிகர் அல்லு அர்ஜூன் ஆவார்.
allu arjune
அல்லு அர்ஜூன் பயன்படுத்தும் அவரது கேரவனின் மதிப்பு சமார் 7 கோடி ரூபாய் என்றும் , இது பாரத் பென்ஸ் சேசிஸ் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் பெயர் பால்கன் என்ற தகவல்கள் வெளியாகிறது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :