செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (19:54 IST)

அலியா பட்னா யாருப்பா? வைரலான கிரிக்கெட் வீரரின் ட்விட்டர் பதிவு

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கும், பாலிவுட் நடிகை அலியா பட்டுக்கும் இடையே நடைபெற்ற ட்விட்டர் உரையாடல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்ஷெல்லே கிப்ஸ். சுமார் 14 ஆண்டுகளாக அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஆடியவர். தற்போது கிரிக்கெட் குறித்து ட்விட்டரில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் “ட்விட்டரே உங்கள் ட்வீட்டை லைக் செய்தால் உருவாகும் உணர்ச்சி” என்று பதிவிட்டு அதில் இந்தி நடிகை அலியா பட் கொடுக்கும் க்யூட் ரியாக்‌ஷன் ஒன்றை பகிர்ந்திருந்தார். ஆனால் அவருக்கு அலியா பட் என்றால் யார் என்றே தெரியாது போல!

அதைபார்த்து அவரது கமெண்டிற்கு வந்த அவரது இந்திய ஃபாலோவர்ஸ் சிலர் “உங்களுக்கு அலியா பட்டை தெரியுமா?” என்று கேட்க, அவரோ “அலியா பட்னா யாருப்பா?” என்ற ரேஞ்சில் பதில் அளித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து பலர் அலியா பட் ஒரு இந்தி நடிகை, அவரை எனக்கு ரொம்ப பிடிகும், அலியா பட்டை உங்களுக்கு தெரியாதது ஆச்சர்யமாக இருக்கிறது என கமெண்டுகளை நிறைத்துள்ளனர். இதையெல்லாம் பார்த்த கிப்ஸ் நடிகை அலியா பட்டை மென்சன் செய்து ஒரு பதிவிட்டார். அதில் பழைய பதிவை இணைத்து “நீங்கள் நடிகை என்று தெரியாது. ஆனால் GIF அழகாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

இந்த மொத்த பஞ்சாயத்துகளையும் அப்போதுதான் நடிகை அலியா பட் கவனித்திருக்கிறார். பிறகு கிப்ஸ் பதிவுக்கு பதிலளிப்பது போல் கிரிக்கெட் க்ரவுண்டில் நடுவர்கள் பவுண்டரிக்கு காட்டும் சைகையை கிப்ஸை மென்சன் செய்து பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த கிப்ஸ் “நான் சிக்ஸ் மட்டும்தான் அடிப்பேன் மேடம். ஃபோர்களை அல்ல” என்று பதிலளித்தார். அலியா ரசிகர்கள் இந்த பதிவுகளின் கீழேயே குடியிருந்து கமெண்டுகளை இட்டு வருகிறார்கள். இது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது.