வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (12:08 IST)

மனைவி மீது சிறுநீர் கழித்த கணவன்! – வரதட்சணை கொடுமை செய்வதாக புகார்!

dowry
பெங்களூரில் வரதட்சணை கேட்டு தன் மேல் சிறுநீர் கழித்து கணவர் கொடுமைப்படுத்துவதாக பெண் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவர் கடந்த 2021ம் ஆண்டு தனது மகளுக்கு பெங்களூரை சேர்ந்த சந்தீப் என்ற நபரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

சுமார் 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் சந்தீப்பிற்கு வரதட்சணையாக 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம் மற்றும் 55 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு கார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்து சில காலம் திருமண வாழ்க்கை சுமூகமாக சென்றுள்ளது.

பின்னர் சந்தீப்பும், அவரது பெற்றோரும் மேலும் வரதட்சணை வாங்கி வரும்படி இளம்பெண்ணை சித்ரவதை செய்ய தொடங்கியுள்ளனர். அடிக்கடி குடித்து விட்டு வரும் சந்தீப் இளம்பெண் மீது சிறுநீர் கழித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதை பொறுக்க முடியாமல் இறுதியாக இளம்பெண் காவல் நிலையத்தை அணுகி மேற்கண்ட சம்பவங்களை கூறி சந்தீப் குடும்பத்தார் மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.