1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (10:13 IST)

பரிதாபங்கள் கோபி & சுதாகர் நடிக்கும் புதிய படம்… வெளியான பூஜை புகைப்படங்கள்!

க்ரவுட் பண்டிங் மூலமாக படம் தயாரித்து நடிக்க உள்ளதாக கோபி & சுதாகர் சில வருடங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.

கிரவுட் பண்டிங் என்று சொல்லப்படும் மக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து திரைப்படங்களை உருவாக்கும் நடைமுறை வெளிநாடுகளில் மிகவும் பிரபலம். மிகப்பெரிய ஸ்டுடீயோக்கள் மற்று  தயாரிப்பு நிறுவனங்களை அனுக முடியாத நல்ல கதை வைத்துள்ள இயக்குனர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் மூலமாகவோ அல்லது இணையதளங்களின் மூலமாகவோ பணம் திரட்டி படத்தை எடுத்து வருகின்றனர். இதில் பணம் முதலீடு செய்யும் ஒவ்வொருவருமே தயாரிப்பாளர்கள்தான்.

சமூக வலைதளமான யுட்யூபில் மிகவும் பிரபலமாக அறியப்படும் கோபி மற்றும் சுதாகர் ஒருப்படத்தை தொடங்க உள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிவித்தனர். இதற்காக தங்கள் யூட்யூப் சேனலின் பாலோயர்ஸிடம் இருந்து நிதி கேட்டனர். இதன் மூலம் சில கோடிகள் வரை வசூலானதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுவரை தொடங்கப்படாமல் இருந்த அந்த படத்தை இன்று தொடங்கியுள்ளனர். பூஜையோடு இன்று தொடங்கியுள்ள இந்த படத்தை விஷ்ணு விஜயன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளன.