1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:15 IST)

சூரி வீட்டுத் திருமணத்தில் 10 பவுன் நகை திருட்டு!

நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.

பிரபல காமெடி நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமணம் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. மதுரையில்  சூரியின் அண்ணன் மகள் சுஷ்மிதா மற்றும் ராம் பிரசாத் ஆகியோருக்கு திருமணம் நடந்தது இந்த திருமணத்தில் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் கருணாஸ் புகழ் தங்கதுரை சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இப்போது அந்த திருமண நிகழ்வில் சுமார் 10 பவுன் தங்க நகைகள் திருடு போயுள்ளதாக இப்போது புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சூரியின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இப்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.