திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (11:46 IST)

உத்திரபிரதேச சாதனையை தமிழகம் முறியடிக்கணும்! – அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 லட்சம் தடுப்பூசி போடப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து வாழ்த்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் ” தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 40ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். தமிழக அரசுக்கு பாராட்டுகள்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ” கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாராவாரம் நடத்தப்பட வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது தான் இந்திய அளவில் சாதனையாக உள்ளது. அந்த சாதனையை தமிழ்நாடு அரசு விரைவில் முறியடிக்க வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.