செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:43 IST)

சரணடைந்த ஞானவேல் ராஜா – பிடிவாரண்ட்டைத் திரும்ப பெற்ற நீதிமன்றம் !

வரி ஏய்ப்பு வழக்கில் பலமுறை வாய்ப்பளித்தும் ஆஜராகாத தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஸ்டூடியோ கீரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா, சூர்யா மற்றும் கார்த்தி ஆகியவர்களை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தார். இந்நிலையில் 2006 முதல் 2009 வரை இவர் தயாரித்த படங்களுக்கு முறையாக வரி கட்டாததால் அதுதொடர்பான வரி ஏய்ப்பு வழக்கில் ஆஜராக சொல்லி நீதிமன்றம் பலமுறை வாய்ப்பளித்தது.

ஆனால் அவர் ஆஜராகததால் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன் பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜா சரணடைந்ததுடன், தமக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்டை திரும்ப பெறவும் கோரியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவரது பிடிவாரண்ட்டை திரும்ப பெற்றது.