மணிரத்னம் படத்தில் “அசுரன்” திரைப்பட பிரபலம்..
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இணையவுள்ளார் அசுரன் திரைப்படத்தில் நடித்த ”டீஜே”
எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபலமான பொன்னியின் சென்ல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கவுள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகிறது.
இத்திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ரகுமான், ஜெயராம், உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அசுரன் திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்த டீஜே ஒப்பந்தமாகியுள்ளார். இவர் முன்னதாக தமிழில் தனியாக சில ஆல்பம்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.