திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (17:31 IST)

"Glimpse of Friendship" ஸ்பெஷல் நாளில் வெளியான "ப்ரண்ட்ஷிப்" படத்தின் வீடியோ!

முதன்முறையாக பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். "பிரண்ட்ஷிப்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரையும் இணைந்து இயக்குகின்றனர்.

ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா கதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார்.

"பிரண்ட்ஷிப்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான ஈர்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு "Glimpse of Friendship"  என கேப்ஷன் கொடுத்து இப்படத்தின்  இடம்பெற்ற காட்சிகளின் சிறிய தொகுப்பினை படக்குழு வெளியிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு , இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள அந்த வீடியோ லிங்க் இதோ .