தனுஷிடம் இருந்து ஒரே ரிப்ளை தான் மாளவிகா மோகனனுக்கு தேடி வந்த வாய்ப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் அண்மையில் தனுஷின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன், " “பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ். வரும் வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் நடிக்க உற்சாகமாக இருக்கிறேன். யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க வைப்பார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த பதிவிற்கு ரிப்ளை செய்த நடிகர் தனுஷ், "நன்றி... விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார். அவர் கூறிய இரண்டே நாளில் மாளவிகா மோகனனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'D43'படத்தில் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.