1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (10:59 IST)

ரஞ்சிதமே ரஞ்சிதமே பாட்டுக்கு செம டான்ஸ்! – வைரலாகும் க்யூட் பாப்பா!

Viral Video
விரைவில் வெளியாக உள்ள விஜய்யின் வாரிசு பட பாடலுக்கு சிறுமி நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் முதல் சிங்கிளான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். குறுகிய காலத்திலேயே அதிகமான பார்வையாளர்களை பெற்ற இந்த பாடலை பலரும் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

அவ்வாறாக சிறுமி ஒருவர் இந்த பாடலுக்கு விஜய் நடனமாடுவது போலவே அனைத்து நடன அசைவுகளையும் சரியாக செய்து க்யூட்டாக ஆடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் சிறுமியின் டான்ஸை பாராட்டி வருகின்றனர்.

Edit By Prasanth.K