1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (15:39 IST)

17 ஆண்டுகளுக்கு பிறகும் கல்லா கட்டிய கில்லி! – கேரள ரசிகர்கள் கொண்டாட்டம்!

விஜய் நடித்த கில்லி திரைப்படம் கேரளாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் திரை வரலாற்றில் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் முக்கியமானது கில்லி. 2004ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்க தரணி இயக்கியிருந்தார்.

கடந்த சில காலமாக கொரோனா காரணமாக கேரளாவில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் காரணமாக திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகமாக உள்ளதால் கேரள திரையரங்குகளில் கில்லி திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதை அங்குள்ள கேரள விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று கொண்டாடி பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.