1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 நவம்பர் 2021 (12:56 IST)

நான் நடிச்சது வேற படம்.. அப்படியே மாத்திட்டாங்க! – கௌதம் மேனன் புகார்!

கௌதம் மேனன் நடித்ததாக அன்புச்செல்வன் என்ற பெயரில் போஸ்டர் வெளியிட்ட நிறுவனம் மீது கௌதம் மேனன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இயக்குனர் கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வரும் நிலையில் ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கௌதம் மேனன் ஹீரோவாக நடித்துள்ளதாக அன்புசெல்வன் என்ற படத்தின் போஸ்டர் வெளியானது. அப்படி எந்த படமும் தான் நடிக்கவில்லை என கௌதம் மேனன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தான் 2018ம் ஆண்டு வினா என்ற படத்தில் நடித்ததாகவும் அதன் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு படப்பிடிப்பு நின்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ள கௌதம் மேனன் அந்த படத்தில் எடுத்த காட்சிகளை வைத்து அன்புச்செல்வன் என புதிய தலைப்பிட்டு விளம்பரம் செய்வதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.