டிரெண்டாகும் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்..!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 19 ஜூன் 2020 (16:14 IST)

துப்பாக்கியின் தோட்டாக்களை தன் கத்தி போன்ற பார்வையாள் தெறிக்கவிடும் வேட்டைக்காரனின் சினிமா பயணத்தை பிறந்தநாளில் பிகில் அடித்து கொண்டாட தளபதி ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கடந்த 1974ம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் - ஷோபா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ஜோசப் விஜய்.

இவரை எஸ்.ஏ. சி எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என கனவு கண்டார். ஆனால், விஜய்யோ தான் சினமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்ற கணவில் இருந்தார். இதனால் எஸ்.ஏ. சி, விஜய்யை ஹீரோவாக நாளைய தீர்ப்பு படத்தில் திரையுலகில் அறிமுகமானார்.

சினிமா பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் வெற்றி தோல்விகளை சரிசமாக வாழ்வில் சந்தித்து சாதரண மக்களை போலவே கேலி , கிண்டலுக்கு ஆளாகி தன் வாழ்வின் இலட்சியத்தை பல இன்னல்களை கடந்து ஜெயித்து காட்டி இன்று வெற்றி நாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கும் விஜய் வருகிற ஜூன் 22ம் தேதி தனது 46 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை வழங்கவிருக்கும் Seven Screen Studio விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் சில
விஜய்யின் உருவத்தை செதுக்குவதுபோல் உள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று செம வைரலாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :