வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (13:56 IST)

எதிர்பாராத ட்விஸ்ட்.. ’தளபதி 69’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்..!

தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தின் நட்சத்திர பட்டியல் குறித்து கடந்த சில நாட்களாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

முதல் கட்டமாக, இந்தப் படத்தின் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்க இருப்பதாகவும், இதைத் தொடர்ந்து நாயகி குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன் பிறகு, இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் மலையாள நடிகை மமிதா பாஜு நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
 
தற்போது, இயக்குனர் கௌதம் மேனன் இந்தப் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கேவிஎன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

அனிருத் இசையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இன்னும் எத்தனை பிரபலங்கள் இடம்பெற இருக்கிறார்கள் என்பதை எதிர்நோக்கி பார்க்கலாம்.

இந்நிலையில், இந்தப் படத்தின் பூஜை நாளை நடைபெற இருப்பதாகவும், நாளை மறுநாளில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தமிழக வெற்றி கழக மாநாடு முடிந்த பின் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran