ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (14:53 IST)

காந்தி பிறந்த நாளில் வெளியான விஜய் சேதுபதியின் ‘காந்தி டாக்ஸ்’ அப்டேட்!

கிஷோர் பி பெலேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஜீ ஸ்டுடியோவின் 'காந்தி டாக்ஸ்' படம் 2022 ஆம் ஆண்டு கோவா 54வது ஐஎஃப்எஃப்ஐ விழாவில் திரையிடப்பட்ட முதல் மௌனப்படம் என்ற பெருமையைப் பெற்றது.

விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சுவாமி மற்றும் சித்தார்த் ஜாதவ் உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் சில ஆண்டுகளுக்கு முன்னரே முடிந்தும் இன்னும் ரிலீஸாகவில்லை. இந்நிலையில் இன்று காந்தி பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் மற்றும் இசையமைப்புப் பணிகளை வெளியிட்டுள்ளது படக்குழு.

மேலும் படம் விரைவில் ரிலீஸாகும் எனவும் அறிவித்துள்ளது. இந்த மேக்கிங் வீடியோவில் நடிகர்கள் காட்சிகளை எப்படி மெருகேற்றிக் கொள்கிறார்கள் என்றும் ஏ ஆர் ரஹ்மான் படத்துக்கான இசையமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் காட்சிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.