வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 21 மார்ச் 2019 (08:12 IST)

தமிழ் அர்ஜூன் ரெட்டியில் கவுதம் மேனன் – பின்னணி என்ன ?

தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அர்ஜூன் ரெட்டி படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருப் படம் முழுவதும் முடிக்கப்பட்டு ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு பின்னர் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டது என்றால் அது பாலா இயக்கிய வர்மா படமாகத்தான் இருக்கும். அதன் பின்னர் இப்போது மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் படம் மீண்டும் தொடங்கியுள்ளது.

புதிய வெர்ஷனை இயக்குவதற்காக துருவ் விக்ரம் தவிர்த்த  மற்ற அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போது வர்மாவின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் புகழ் ரவி கே சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக நடிகை பனிதா சந்தூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெர்ஷனை இயக்குவதற்கு தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரி சாயா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதேப் போல இப்போது படத்தில் துருவ்வின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே வர்மா படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.