திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2020 (22:13 IST)

என்னைப் போல உருவம் இருப்பவர்களுக்கு வாய்ப்பு – பார்த்திபன் அறிவிப்பு!

நடிகர் பார்த்திபன் தான் அடுத்ததாக உருவாக்க இருக்கும் படத்தில் நடிக்க நடிக நடிகைகளை தேடி வருகிறார்.

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் தன் ஒத்த செருப்பு படத்துக்குப் பின் இப்போது புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க தன்னைப் போலவே உருவம் கொண்டுள்ள நடிக நடிகைகளை தேடி வருகிறார். அதற்கான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும். [email protected]’ எனத் தெரிவித்துள்ளார்.