சிவகார்த்திகேயனுக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை – கெளதம் கார்த்தி
சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் கெளதம் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஹர ஹர மஹாதேவஹி’. இந்தப் படத்தில், கெளதம் கார்த்தி ஜோடியாக நிக்கி கல்ரானி நடித்துள்ளார். அடல்ட் காமெடியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு, அறிவித்தும் விட்டனர். ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாவதால், விஜய்யுடன் போட்டிபோட பயந்து முன்கூட்டியே படத்தை ரிலீஸ் செய்கின்றனர். செப்டம்பர் 29ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் படம் ரிலீஸாகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் ‘ஸ்பைடர்’, ஜி.வி.பிரகாஷின் ‘செம’ ஆகிய படங்கள் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸாகின்றன.