1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (21:32 IST)

எக்ஸ்குளூஸிவ்: சிவகார்த்திகேயன் வேண்டாம், சிம்பு போதும்… தப்புக்கணக்கு போட்ட ஜீவா

ஜீவா நடித்துள்ள ‘கீ’ படத்தின் போஸ்டரை வெளியிட சிவகார்த்திகேயன் தயாராக இருந்தும், மறுத்துவிட்டாராம் ஜீவா.


 
 
கலீஸ் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘கீ’. நிக்கி கல்ரானி, அனைக்கா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, ‘குளோபல் இன்ஃபோடைன்மெண்ட்’ சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு அவர் தயாரித்துள்ள படம் இது.
 
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வெளியானது. கமர்ஷியல் ஹீரோ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டால் பெரிய ரீச் இருக்கும் என்று எதிர்பார்த்த தயாரிப்பு தரப்பு, சிவகார்த்திகேயனை அணுகியது. அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
 
இந்த விஷயம் ஜீவாவுக்கு சொல்லப்பட, அங்கே எகிறிக் குதித்திருக்கிறது அவருடைய ஈகோ. ‘நமக்குப் பின்னால் சினிமாவுக்கு வந்தவன், நம்முடைய படத்தின் போஸ்டரை வெளியிடுவதா? முடியவே முடியாது’ என ஜீவா ஒற்றைக்காலில் நிற்க, வேறு வழியில்லாத தயாரிப்பாளர், போன படத்தின் ஹீரோவான சிம்புவை வைத்து ரிலீஸ் செய்தார்.
 
‘அஅஅ’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த நேரத்தில் சிம்பு ரிலீஸ் செய்ததால், அவர்கள் நினைத்த அளவுக்கு மோஷன் போஸ்டர் ரீச் ஆகவில்லை. 20 நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் முக்கி முக்கி ஒரு லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. இதுவே சிவகார்த்திகேயன் வெளியிட்டிருந்தால் மிகப்பெரிய ரீச் கிடைத்திருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.