திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 பிப்ரவரி 2024 (15:43 IST)

ஐபிஎல்லில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் திடீர் விலகல்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

GT
ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் பிரபல இந்திய வீரர் போட்டியிலிருந்து விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளுக்கு இந்தியா முழுவதுமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டும் சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான அணி அட்டவணை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்தவரும், இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளர்களில் ஒருவருமான முகமது ஷமி அணியில் இருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இடது கணுக்காலில் அவருக்கு ஏற்பட்ட காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

Shami


இந்திய அணிக்காக கடந்த ஆண்டு உலக கோப்பை ஒருநாள் போட்டி முதலாக பல போட்டிகளில் விளையாடி வரும் ஷமி விக்கெட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவார். அவர் குஜராத் அணியில் இல்லாதது நிச்சயமாக அணியின் பலவீனமாக மாறும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K