ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (14:58 IST)

கோட் படத்தில் இரண்டு வேலைகளை செய்யும் கங்கை அமரன்… லேட்டஸ்ட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ சில நாட்களுக்கு முன்னர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இதுவரை கோட் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் மூன்று பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதில் ஒரு ஜாலியான குத்துப் பாடலை வெங்கட் பிரபுவின் அப்பா கங்கை அமரன் எழுதியுள்ளதாகவும், அந்த பாடலை அவரே பாடியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அந்த பாடலைக் கேட்ட விஜய், பாடல் நன்றாக வந்துள்ளதாகவும் சொல்லி பாராட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.