ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (14:46 IST)

100 கோடி ரூபாய் வசூலித்த விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான மகாராஜா ஜூன் 12 ஆம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது.  நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்கு ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது மகாராஜா. இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் மற்றும் சிங்கம்புலிஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் அந்த கிளைமேக்ஸ் காட்சிக்காக அதீத டிராமவை கொண்டு செயற்கை தன்மை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் கடந்த காலங்களில் விஜய் சேதுபதியின் எந்த படமும் தொடாத வசூல் சாதனையை மகாராஜா செய்துள்ளது. இந்த படம் திரையரங்குகள் மூலமாக மட்டுமே 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.