வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (08:55 IST)

ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தவெக தலைவர் விஜய் கண்டனம்.. என்ன சொன்னார் தெரியுமா?

Vijay Speech
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர் இந்த படுகொலை குறித்து கூறியிருப்பதாவது:
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
 
திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
விஜய் தனது கண்டன அறிக்கையில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் தமிழக அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று மென்மையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் மற்ற கட்சி தலைவர்கள் தெரிவித்த அளவுக்கு அவர் தனது கண்டனத்தை வலிமையாக பதிவு செய்யவில்லை என்றும் நெட்டிசன்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran