செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (21:06 IST)

திமிரு பிடிச்சவன்: சென்னை போலீசார்களுக்காக ஸ்பெஷல் காட்சியா?

விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது..

இந்த நிலையில் திமிரு பிடிச்சவன் படக்குழுவினர் இன்று சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து, சென்னை காவல்துறையினர்களுக்காக ஒரு பிரத்யேக காட்சி திரையிட அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு காட்சி விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.

இந்த படம் குற்றவாளியை தண்டிப்பதைவிட குற்றவாளியிடம் சிக்கியிருக்கும் இளைஞர்களை மீட்க போலீசார்களின் வித்தியாசமான அணுகுமுறையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்த படத்தின் ஹீரோவை போல் சென்னை போலீசார்களும் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிறப்புக்காட்சி ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.