ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (07:07 IST)

ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸாகும் ஜி வி பிரகாஷின் இரண்டு படங்கள்!

ஜி வி பிரகாஷ் நடிப்பில் கடந்த மார் 22 ஆம் தேதி ரெபல் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்புக் கிடைக்கவில்லை.

அடுத்து அவர் நடிப்பில் ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு தயாரிப்பில் இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.  இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நக்கலைட்ஸ் டீம் ஜென்சன் திவாகர், பிரசன்னா பாலச்சந்திரன், தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையடுத்து ஏப்ரல் 11 ஆம் தேதி ஜி வி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டியர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாதத்துக்குள் ஜி வி பிரகாஷின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றன.