வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (11:04 IST)

நேர்மறையான விமர்சனங்களைக் குவிக்கும் ஜி வி பிரகாஷின் ’அடியே’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். காதல் படங்களில் நடித்து வரும் ஜிவி பிரகாஷ் தற்போது ஒரு படி மேலே சென்று மல்டிவெர்ஸ் காதல் கதையில் நடித்துள்ளார். ’திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தை இயக்க இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான போதே நல்ல வரவேற்பைப் பெற்றது. பேரலல் யூனிவர்ஸ் என சொல்லப்படும், இந்த உலகின் நபர்களை வேறொரு உலகத்தில் அவர்களின் பாத்திரங்களை இஷ்டத்துக்கு மாற்றி உருவாக்கும் ஒரு நகைச்சுவை கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு இந்த படத்தில் சென்னையில் பனிமழை பெய்யும். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மன்சூர் அலிகான் இருப்பார்.

இப்படி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் முதல் காட்சியிலேயே ரசிகர்களை கவர தொடங்கியுள்ளது. படம் பார்த்த பலரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் படத்தைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.